அவளை...இப்படித்தான் அழைக்கிறோம்!

ரெண்டுமூன்று வருஷங்களாய்
இங்கேதான் இருக்கிறாள்...

வந்தபோது வைத்திருந்த
புன்னகை மாறாமல்,
என்ன வீட்டில் சொன்னாலும்
எதிர்வார்த்தைபேசாமல்...

விருந்தினர்கள் வந்தாலும்
வேறுபாடு பார்க்காமல்,
வேலை மிகவென்றாலும்
முகச் சுளிப்புக்காட்டாமல்...

கண்ணையும் கசக்காமல்
காசெதுவும் கேட்காமல்
தன்னுடைய நோவுக்காய்
விடுமுறையும் எடுக்காமல்...

சொல்லுவ தெல்லாமும்
செய்து முடித்துவிட்டு
இன்னமென்ன இருக்குதென்று
எதிர்பார்த்து நிற்பதுபோல்...

என்ன பிறவியிவள்
என வியக்கவைத்தவளை...

'அம்மா' என்றழைக்கிறான் என்மகன்,
'அடியே' என்றழைக்கிறேன் நான்...

கருத்துகள்

  1. சுந்தரா. அழகான அம்மாவுக்கு வாழ்த்துகள். பெருமூச்சுதான் வருகிறது.

    பதிலளிநீக்கு
  2. முடிவு நச், அதே சமயம் :( !

    அழகாய் சொல்லி விட்டீர்கள் சுந்தரா அவலத்தை!

    பதிலளிநீக்கு
  3. //சுந்தரா. அழகான அம்மாவுக்கு வாழ்த்துகள். பெருமூச்சுதான் வருகிறது.//

    நன்றி வல்லிம்மா...

    பெருமூச்சில் துயரங்களைக் கரைத்துவிட்டு, மறுநாள் வேலைக்காக மனதைத் தயார்படுத்திக்கொள்ளுதல்தான் அம்மாக்களுக்கு இலக்கணம்போலிருக்கிறது...

    பதிலளிநீக்கு
  4. //ராமலக்ஷ்மி said...
    முடிவு நச், அதே சமயம் :( !

    அழகாய் சொல்லி விட்டீர்கள் சுந்தரா அவலத்தை!//

    நன்றி ராமலஷ்மிக்கா.

    பதிலளிநீக்கு
  5. // Information said...
    Arumaiyana kavithai.//

    நன்றி தகவலாரே!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!