காட்சிப் பிழை!
புகைப்படம் : இணையத்திலிருந்து.
கனத்த முகம் கருக்கு மீசை
நெரித்த புருவமும்
எரிக்கிற பார்வையுமாய்க்
கைவைத்த நாற்காலியில்
காசித் தாத்தா...
நாற்காலிச் சரிவில்
நளினமாய்க் கைவைத்து,
நாணமும் அச்சமுமாய்
நாகலச்சுமி ஆச்சி...
புகைப்படத்தை
உற்றுப்பார்க்கிற எல்லாரும்
சட்டென்று சொல்லுவார்கள்,
காசித்தாத்தாவின் கண்களில்
கடுங்கோபம் தெரிகிறதென்று...
ஆனால்,
கண்ணைத் துடைத்துக்கொள்ளுகிற
ஆச்சியின் கண்களில்
மின்னலாய் விரியும்...
புகைப்படக்காரனுக்குப்
புரியாத தினுசில்,
சின்ன ஸ்பரிசமும்
கண்ணிறையக் கனிவுமாக
இன்னும் கொஞ்சம்
பக்கத்தில் நிற்கச்சொல்லி,
அவர் பார்வையால் பேசியது!
எப்படி இப்படி நுனுக்கமாக எழுதுகிறீங்க
பதிலளிநீக்குசுந்த்ரா எப்படி இருக்கீங்க ரொம்ப நாளா ஆளைக்கானும்
படம் ரொம்ப நல்ல இருக்கு
பதிலளிநீக்குஅவரவர் பார்வைகள்.. :-))
பதிலளிநீக்கு//Jaleela Kamal said...
பதிலளிநீக்குஎப்படி இப்படி நுனுக்கமாக எழுதுகிறீங்க
சுந்த்ரா எப்படி இருக்கீங்க ரொம்ப நாளா ஆளைக்கானும்//
வாங்க ஜலீலா :) நம்ப பாலைவனத்தைவிட்டு நான் எங்கயும் போகல. நீங்க நலம்தானே?
//அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்குஅவரவர் பார்வைகள்.. :-))//
வாங்க சாந்தி :)
நன்றி!
புகைப்படக்காரனுக்குப்
பதிலளிநீக்குபுரியாத தினுசில்,
சின்ன ஸ்பரிசமும்
கண்ணிறையக் கனிவுமாக
இன்னும் கொஞ்சம்
பக்கத்தில் நிற்கச்சொல்லி,
அவர் பார்வையால் பேசியது
உள்ளுரை கொண்டே-கவிதை
உரைத்திடும் இதுவே
தெள்ளிதின் ஆயின்-நன்கு
தெரிவது அதுவே
சொல்லினீர் நன்றே-எடுத்து
சுவைபட இன்றே
நல்லுளம் கொண்டென்-வலை
நாடினீர் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
அடேயப்பா ஆச்சிக்கு மட்டும் புரிந்ததை
பதிலளிநீக்குமிக அழகாகப் புரிந்து கொண்டு
அவர்கள் வாழ்வின் அன்னியோன்யம் குறித்து
படைத்துள்ள கவிதை அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
பதிலளிநீக்கு//புலவர் சா இராமாநுசம் said...
பதிலளிநீக்குஉள்ளுரை கொண்டே-கவிதை
உரைத்திடும் இதுவே
தெள்ளிதின் ஆயின்-நன்கு
தெரிவது அதுவே
சொல்லினீர் நன்றே-எடுத்து
சுவைபட இன்றே
நல்லுளம் கொண்டென்-வலை
நாடினீர் நன்றி!
புலவர் சா இராமாநுசம்//
முதல் வருகைக்கு மிக்க நன்றிகள் ஐயா!
தங்கள் கவிதை மறுமொழி கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி!
//Ramani said...
பதிலளிநீக்குஅடேயப்பா ஆச்சிக்கு மட்டும் புரிந்ததை
மிக அழகாகப் புரிந்து கொண்டு
அவர்கள் வாழ்வின் அன்னியோன்யம் குறித்து
படைத்துள்ள கவிதை அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்//
நன்றிகள் ரமணி சார்...வாக்குக்கும் வாழ்த்துக்கும்!
அடடே!
பதிலளிநீக்குதாத்தா பாட்டியின் காதலுக்கு ஒரு கவிதை.
அழகு!
மிக்க நன்றி சத்ரியன்!
பதிலளிநீக்கு////புகைப்படக்காரனுக்குப்
பதிலளிநீக்குபுரியாத தினுசில்,
சின்ன ஸ்பரிசமும்
கண்ணிறையக் கனிவுமாக
இன்னும் கொஞ்சம்
பக்கத்தில் நிற்கச்சொல்லி,
அவர் பார்வையால் பேசியது!///
கல்லுக்குள் ஈரம்.....
சொல்லும் பொருளும் முத்தாய்ப்பு...
நன்றியோடு, பாராட்டுக்கள் சகோதிரி...
முதல்வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றிகள் தமிழ்விரும்பி!
பதிலளிநீக்குஇனிய நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு(தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்
காத்திருக்கிறோம் )
புகைப்படத்தை
பதிலளிநீக்குஉற்றுப்பார்க்கிற எல்லாரும்
சட்டென்று சொல்லுவார்கள்,
காசித்தாத்தாவின் கண்களில்
கடுங்கோபம் தெரிகிறதென்று...
ஆனால்,
கண்ணைத் துடைத்துக்கொள்ளுகிற
ஆச்சியின் கண்களில்
மின்னலாய் விரியும்...
புகைப்படக்காரனுக்குப்
புரியாத தினுசில்,
சின்ன ஸ்பரிசமும்
கண்ணிறையக் கனிவுமாக
இன்னும் கொஞ்சம்
பக்கத்தில் நிற்கச்சொல்லி,
அவர் பார்வையால் பேசியது!
அருமையான உணர்சிக் கவிதை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ....
//இனிய நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு(தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்
காத்திருக்கிறோம் )//
வாழ்த்துக்களுக்கு நன்றி ரமணி சார், விரைவில் பதிகிறேன்.
//அம்பாளடியாள் said...
பதிலளிநீக்குஅருமையான உணர்சிக் கவிதை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ....//
வாங்க சகோ...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
உண்மையான கருத்தை கொண்டிருக்கும் நல்ல கவிதை.
பதிலளிநீக்குஎனக்குப் பிடித்திருந்தது. உங்களின் இப்பதிவை வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி. :)
கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.
http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_24.html