வேலையில்லாப் பட்டதாரியின் 'வீட்டுக்' குறிப்புகள்!

அப்பா

வரவுக்கும் செலவுக்குமிடையில்
வட்டிக்கணக்குப் பார்த்தபடி
புட்டிக் கண்ணாடி வழியாகப்
பிள்ளைகளின் 
எதிர்காலத்தைத் தேடுபவர்...

சட்டென்று கோவப்பட்டாலும்
சம்சாரத்துக்கு முன்னால்
பெட்டிப்பாம்பு...

அம்மா

அக்கறை காட்டுகிறேனென்று
அவஸ்தைப்படுத்துபவள்
அவ்வப்போது,
அன்பில் கரைத்தும் அழவைப்பவள்.

தப்பென்று தெரிந்தாலும்
தன்மையாய்ப் புரியவைப்பவள் 
அப்பாவுக்கும் பிள்ளைகளுக்குமிடையில்
எப்போதும் தவிக்கும்
இருதலைக்கொள்ளி எறும்பு...

அக்கா

petty cash படியளப்பதில்
பெரிய மனசுக்காரி,
சிலசமயம்,
தட்டிக்கேட்பதில் தாய்.

தம்பி


போட்டுக்கொடுக்கவென்றே
வீட்டிலிருக்கிற ராட்சசன்...
மூத்தவனை முட்டாளாக்க
இளையவனாய்ப் பிறந்துதொலைத்த
எதிரி!


 *****

கருத்துகள்

  1. தலைப்பு இந்தக் க்விதைக்கு கூடுதல்
    அழகு சேர்க்கிறது அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    பதிலளிநீக்கு
  2. //அமைதிச்சாரல் said...
    ஜூப்பரு குறிப்புகள் :-)//

    வாங்க சாரல் :)

    நன்றி!

    பதிலளிநீக்கு
  3. //ராமலக்ஷ்மி said...
    ரசித்தேன் சுந்தரா:)!//

    நன்றிகள் அக்கா :)

    பதிலளிநீக்கு
  4. //Ramani said...
    தலைப்பு இந்தக் க்விதைக்கு கூடுதல்
    அழகு சேர்க்கிறது அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் சார்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!