எதுவரை மதிப்பு?
இரவுக்கு மதிப்பு... விடியும் வரை. விடிந்து விட்டால்,,,வானில் தங்காது பிறை. கணவுக்கு மதிப்பு... களையும் வரை. களைந்து விட்டால்,,, வெளுத்திருப்பது வெள்ளை திரை. மழைக்கு மதிப்பு... மண்ணை சேறும் வரை. மண்ணை வந்தடைந்து விட்டால்,,,வெரும் சேற்று கறை. காதலுக்கு மதிப்பு... மணவரை வரை. மணவாழ்க்கையில் சேர்ந்து விட்டால்,,,தொட்டதெல்லாம் குறை. வயதுக்கு மதிப்பு... ஐம்பதை தொடும் வரை. காலம் கடந்து பொனால்,,,மிஞ்சியிருப்பது நரை. வாழ்க்கைக்கு மதிப்பு... வாழ்வை இரசிக்கும் வரை. வாழ்ந்து பார்க்கலாம்,,,ஒரே ஒரு முறை. உடலுக்கு மதிப்பு... உயிர் உள்ள வரை. உயிர் விட்டுச் சென்றால்,,,உடல் மண்னுக்கு இரை. தமிழனுக்கு மதிப்பு... தமிழ் உள்ள வரை. தாய் மொழி மறந்தவன்,,,எச்சில் கறை. ************ இது, சுவரன் என்னும் பெயருடைய இலங்கைத் தமிழ்க்கவிஞரொருவர் எழுதியதாக, மின்னஞ்...