காய்த்திருக்கும் கனிமரம்!


கல்லடி,சொல்லடி
கனலுகிற பகையடியென்று
எல்லாத் திசையிருந்தும்
அடிக்கத் துடித்தாலும்,
துணிந்து மட்டுமல்ல
தலைநிமிர்ந்தும் நிற்கிற 
திறமைசாலி நீ...

மொழியென்றும் மதமென்றும்
மோதிக்கொள்ளும் மக்களுக்கு,
மதியால் ஒன்றிணையும்
மகத்துவமும் தெரிந்திருப்பதால்,
கண்ணடியும் உனக்குக்
கொஞ்சம் அதிகம்தான்...

புல்லுருவிகளாய் ஒருசிலர்
பகையுடன் பார்த்தாலும்,
எல்லாரும் விரும்பும்படியான
இணையற்ற அழகிதான் நீ...

சுரண்டிச்சுரண்டியே உன்
செல்வத்தைத் திருடினாலும்
குறையாமல் நிறைவதே
உன் குலச்சிறப்பாய்ச் சொல்கிறார்கள்...

இணையாகச் சொல்லப்படுகிற
இன்னுமொரு சிறப்பு,
உலகெங்கும் புகழ்சேர்க்கும்
உன்குலத் தோன்றல்கள்...


கிட்ட இருக்கையில்
உன்னைக்
கேலிசெய்த வர்கள்கூட,
எட்டிப்போனபின் உனக்காக
ஏங்கத்தான் செய்கிறார்கள்...

ஊழல் அரசியலும்
உள்வீட்டுச் சண்டைகளும்
வீழத் தள்ளிவிடும்
வெறியோடு எழுந்தாலும்,
தாயாகி அத்தனையும்
தாங்கி நிமிர்கிறாய்,
தாயே, திருநாடே,
உனக்கு என் வணக்கங்கள்!

கருத்துகள்

  1. ஆஹா... கொடி கலர் பின்னணியில் கவிதைகள்... அருமையான கிரியேட்டிவிட்டி தலைவா... குடியரசு தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வரிக‌ளும்
    வண்ணமும்
    அருமை

    புதிய‌ உத்தி

    பாராட்டுக‌ள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழுக்கு வணக்கம்!

நான்...இயற்கை பேசுகிறேன்!

ஜனனம்