கோபால் பல்பொடியும் கொஞ்சம் காரப்பொரியும்!


ஊருக்கு வருகிறேனென்று
உறவுகளை அழைத்துச்சொல்ல,
ஆளுக்கொரு பொருள்கேட்டு
அடுக்கடுக்காய் அழைப்புகள்...

பவுனாக வாங்கிவந்தால்
பெருமையாக இருக்குமென்று
மாமியார் சொன்னபோது
பணக்கணக்குப் போட்டது மனசு...

அடுத்து,
பேத்தியிடம் கேட்டார்கள்,
இந்தியா வந்ததும்
உனக்கு என்னவேண்டுமென்று...

சின்னமகள் சொன்னாள்,
கோபால் பல்பொடியும்
கொஞ்சம் காரப்பொரியும் என்று!!!


கருத்துகள்

  1. குழ‌ந்தையின் ம‌ன‌து
    வ‌ய‌தானால் வாய்க்காதோ?

    பதிலளிநீக்கு
  2. ஹை கோபால் பல்பொடி பார்த்ததும் ரொம்ப ஆசையா இருக்கு இனிப்பா கர கரன்னு இருக்கும்,

    பதிலளிநீக்கு
  3. காலையில கோபால் பல்பொடி திங்கிறதுக்காகவே தேக்கிறவ நான்!! அதுவும், கோபால் பல்பொடி விலை கூடன்னு, ஏபிஸி பல்பொடின்னு ஒண்ணு வாங்குவாங்க எங்கம்மா!! அது இந்தளவு டேஸ்ட் வராது!! ;-))))

    பதிலளிநீக்கு
  4. சூப்பர்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. நன்றிகள் வாசன் ஐயா!

    நன்றி ஜலீலா!

    நன்றி ஹுசைனம்மா, நானும் உங்கமாதிரிதான் :)

    பதிலளிநீக்கு
  6. நன்றிகள் மதுரை சரவணன்!

    நன்றி அமைதிச்சாரல்!

    பதிலளிநீக்கு
  7. நன்றிகள் அண்ணா!

    நன்றி தியாவின் பேனா!

    பதிலளிநீக்கு
  8. உங்களுக்கு அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ளேன்

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதை சுந்தரா

    பதிலளிநீக்கு
  10. மூன்று நாலு வயதில் ஒருநாள் நானும் அண்ணனும் கோபால் பல்பொடியை பாக்கெட்டோடு தண்ணீரில் கலந்து ஷர்பத் போலக் குடித்ததாய் அம்மா சொல்லிச் சிரிப்பார்கள்:)!

    பதிலளிநீக்கு
  11. காலையில கோபால் பல்பொடி திங்கிறதுக்காகவே தேக்கிறவ நான்!! //

    அய்யோ உண்மைய எல்லாம் சொல்லபுடாது :))))))

    பதிலளிநீக்கு
  12. வாவ்... இன்னும் இந்த பல்பொடி இருக்கா நெஜமா...

    வாஸ்துவம் தான்... பிள்ளை மனம் எப்பவும் அழகு தான்... பெரிசான தான் நகையும் பணமும் கேக்கும் மனசு

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!