என்னத்தைச் செய்தீங்க...(3)

என்னத்தைச் செய்தீங்க...(மூன்றாவது பகுதி)

"அச்சச்சோ சிவகாமி,
அழாதே நீ" என்றபடி,
நிச்சயமாய் இன்றைக்குக்
கலவரம்தான் என்றெண்ணி
உச்சிமுதல் ஓடியதோர்
அச்சத்தை மறைத்தவராய்
"பச்சைப் பிள்ளைபோல்
அழுதிடாமல் சொல்" என்றார்.

போகும் இடத்தினிலே
பெருமையான வாழ்வுவரும்
வீடும் வாகனமும்
விருத்தியும் கூடுமென்று
கரட்டுப்பட்டி ஜோசியர்
சொன்ன கணக்கெல்லாம்
கண்மூடும் முன்னாலே
பார்ப்பேனோ மாட்டேனோ...

என்று சலிப்பாகச்
சொன்ன நிமிடத்தில்
விளக்குப் போட்டதுபோல்
துலங்கியது அந்நினைவு...
"நீர்செழித்து நெல்விளையும்
வயல்நிலத்தை விற்றுவிட்டு
வாகனம் வாங்குவோம்"
என்றது நினைவில்வர,

ஆனாலும் சிவகாமி,
அது
அப்பாவின் குலச்சொத்து
கோடையிலும் வாடையிலும்
குறையாத நீர்வரத்து...
சோறுதரும் மண்ணைவிற்றுக்
காரை வாங்கி நிறுத்திவிட்டால்
விலையரிசி வாங்கிஉண்ணும்
நிலைவருமே கவனியென்றார்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!