** வண்ணத்துப்பூச்சி விருது **

என்னுடைய கிறுக்கல்களுக்கும் மதிப்பளித்து இந்த விருதினை எனக்கு வழங்கிய தமிழ்ப் பிரியரான திகழ்மிளிருக்கு என் மனமார்ந்த நன்றிகள்! இவரது வலைத்தளத்தின் அமைப்பும், அதில் இடும் படங்களும் என்னை மிகவும் ரசிக்கவைத்த விஷயங்கள்.
எனக்குக் கிடைத்த இந்த மகிழ்ச்சியை நான் தேடிப்படிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர்களான இவர்களுக்கு வழங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
கிருத்திகா, அனுபவங்களாகட்டும் கவிதைகளாகட்டும் சொல்லவந்ததைச் சிறப்பாகச்சொல்லும் இவரது பாணி எனக்கு மிகவும் பிடிக்கும்.
துளசி கோபால், டீச்சர் என அனைவராலும் மதிப்புடன் அழைக்கப்படும் இவருடைய பதிவுகள், நகைச்சுவையாகவும் அதேசமயத்தில் பள்ளிக்குழந்தைகளுப் பொறுமையுடன் சொல்லித்தருவதுபோலவே படங்களும் விளக்கங்களுமாய் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும்.
நாவிஷ் செந்தில்குமார், முத்தமிழ்மன்றத்திலிருந்தே இவரது கவிதைகள் பரிச்சயம் எனக்கு. கதைசொல்லும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர்.அருமையாக எழுதுகிறார்.
அருமையான இந்த வாய்ப்பினை வழங்கிய திகழ்மிளிருக்கு மீண்டும் என் நன்றிகள்!
நன்றிங்க பதிவுக்கு
பதிலளிநீக்குவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
நாவிஷ் செந்தில்குமார் அவர்கள்
எனக்கு புதியவர்
வாழ்த்துகள்
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சுந்தரா.. ஏற்கனவே பாசமலர் இந்த விருதை எனக்கு அளித்து அதை நானும் மூவருக்கு பகிர்ந்தளித்து விட்டேன்... நன்றி மீண்டும்
பதிலளிநீக்கு//திகழ்மிளிர் said...
பதிலளிநீக்குநன்றிங்க பதிவுக்கு
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
நாவிஷ் செந்தில்குமார் அவர்கள்
எனக்கு புதியவர்
வாழ்த்துகள்//
மீண்டும் என் நன்றிகள் திகழ்மிளிர்!
//கிருத்திகா said...
பதிலளிநீக்குதங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சுந்தரா.. ஏற்கனவே பாசமலர் இந்த விருதை எனக்கு அளித்து அதை நானும் மூவருக்கு பகிர்ந்தளித்து விட்டேன்... நன்றி மீண்டும்//
ஒருவருடைய எழுத்து நிறைய பேருக்குப் பிடித்ததாக இருக்கக்கூடாததா என்ன? :)
இந்த விருது என்னுடைய விருப்பத்தின் பகிர்வு மட்டுமே கிருத்திகா.
இதையும் நீங்கள் பகிரத் தேவையில்லை.
நன்றி!
நன்றி சுந்தரா... எனக்கு இந்த விருது தங்களின் வாயிலாகக் கிடைத்தது மிக்க சந்தோசம்.. இந்த விருதினைப் பற்றி சரியான புரிதல் இல்லாத நிலையில் கிடைத்துள்ளது...
பதிலளிநீக்குவிரைவில் இந்த விருதினை சிலருடன் பகிர்ந்து கொள்கிறேன்...
மீண்டும் நன்றி..