பொய்ப் பிரிவு


அனுமதிக்கப்பட்ட
ஆயிரத்துக்கும் அதிகமாய்ப்
பொய்சொன்னாய் நீயென்று,
பிரித்துவைத்துவிட்டுப்
பேசிக்கொண்டிருக்கிறார்கள் பெரியவர்கள்...

இங்கே,
நீயற்ற நெடுவெளியில்
நோயுற்ற நினைவுகளுடன்
ஒற்றையாய் நடக்கிறேன்...

ஆனால்,
சொல்லிழந்துகிடக்கும்
சோக நிமிஷங்களிலும்,
என்னைக்
கொஞ்சமேனும் புன்னகைக்கவைப்பது,
அன்றைக்கு நீ சொன்ன
சில
அழகான பொய்கள் என்று
எப்படிச் சொல்லி
இவர்களுக்குப் புரியவைப்பேன்?

கருத்துகள்

  1. அருமை சுந்தரா. சில நேரங்களில் சில பொய்கள், பொய்யெனத் தெரிந்தும் விரும்பத்தக்கதாக ஆகிவிடுவதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. அசத்தல் நல்ல இருக்கு . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

    பதிலளிநீக்கு
  3. //ராமலக்ஷ்மி said...

    அருமை சுந்தரா. சில நேரங்களில் சில பொய்கள், பொய்யெனத் தெரிந்தும் விரும்பத்தக்கதாக ஆகிவிடுவதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள் அக்கா!

    பதிலளிநீக்கு
  4. //!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

    அசத்தல் நல்ல இருக்கு . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்//

    வாங்க சங்கர்...வருகைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. சுந்தரா அழகாக யதார்த்தம்..........எளிமையான வரிகள்.......மொத்தத்தில் அருமை....

    பதிலளிநீக்கு
  6. ரெம்ப அழகா இருக்குங்க உங்க கவிதை... பொய்கள் அழகு தான் நம் வாழ்வுக்கு அழகு சேர்க்கும் வரை

    பதிலளிநீக்கு
  7. முரண்பாடுகள் உங்கள் கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன!

    நினைத்து புலம்புவதும், சிரிப்பதும் நினைவுகளால்/பொய்களால் மட்டுமே சாத்தியம்!



    நினைவுகளை நினைவுகுள்ளாக்கிய கவிதை சாரம் அற்புதம்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!