தண்ணீர்...தண்ணீர்...
வைகையோ வறண்டுபோச்சு
காவிரியைக் காணவில்லை...
ஏரியெல்லாம் மாறிப்போச்சு
குளங்களெல்லாம் குப்பையாச்சு...
வான்மழையும் கானலாச்சு
வயல்காடும் வெடிச்சுப்போச்சு

அதற்காக,
நான் மட்டும் குளிக்காவிட்டால்
நன்மையென்ன நடந்துவிடும்?
குளிக்கவென்று குதூகலமாய்
குழாயடியில் உட்கார்ந்தால்,
அடுப்படிப் பாத்திரம்போல்
அழுக்கைமட்டும் தேய்த்துவிட்டு,
கால்வாளித் தண்ணீரில்
கழுவி என்னை அனுப்புகிறாய்...

ஆனாலும் இது ரொம்ப
அநியாயக் கொடுமையம்மா...
நெய்யென்று கேட்டால்கூட
நிறையவே ஊற்றும் நீ,
குளிக்கும்
தண்ணீரைக் கேட்டால் மட்டும்
கொஞ்சமாகத் தெளிக்கிறாயே...
காவிரியைக் காணவில்லை...
ஏரியெல்லாம் மாறிப்போச்சு
குளங்களெல்லாம் குப்பையாச்சு...
வான்மழையும் கானலாச்சு
வயல்காடும் வெடிச்சுப்போச்சு
அதற்காக,
நான் மட்டும் குளிக்காவிட்டால்
நன்மையென்ன நடந்துவிடும்?
குளிக்கவென்று குதூகலமாய்
குழாயடியில் உட்கார்ந்தால்,
அடுப்படிப் பாத்திரம்போல்
அழுக்கைமட்டும் தேய்த்துவிட்டு,
கால்வாளித் தண்ணீரில்
கழுவி என்னை அனுப்புகிறாய்...
ஆனாலும் இது ரொம்ப
அநியாயக் கொடுமையம்மா...
நெய்யென்று கேட்டால்கூட
நிறையவே ஊற்றும் நீ,
குளிக்கும்
தண்ணீரைக் கேட்டால் மட்டும்
கொஞ்சமாகத் தெளிக்கிறாயே...
படங்கள் கொள்ளை அழகு! கவிதையும் அழகு!! :-)
பதிலளிநீக்குஅருமை பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅருமையான - அனுபவிக்கயியலாத சோகத்தின் வெளிப்பாடு - கவிதை!
பதிலளிநீக்குசிறு குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாடுவது என்பது எத்துணை ஆர்வம் என்பதை சற்று தூரத்திலிருந்து பார்த்து ரசிக்கும்போதே புரியும்! அது போன்றாதொரு சுதந்திரம் இல்லா தினசரி குளிக்கவே வாய்ப்பளிக்கப்படாமல் வளரும் குழந்தைகளும் உண்டு நினைத்து பார்க்கையில் நிறையவே இழக்கப்போகிறது இனி வரும் தலைமுறை :((
போட்டோவும் குழந்தையும் அழகு
பதிலளிநீக்குகவிதை நெம்ப யோசிக்கவைக்குது.....
நீண்ட நாட்களுக்குப் பிறகு
பதிலளிநீக்குஅற்புதமான வரிகள்
படமா கவிதையா
பட்டிமன்றம் தான்
வாழ்த்துகள்
இன்னும் எழுதுங்கள்
நேரம் இருந்தால்
படிக்க ஆவலுடன்
திகழ்
//படங்கள் கொள்ளை அழகு! கவிதையும் அழகு!! :-)//
பதிலளிநீக்குநன்றி சந்தனமுல்லை...குழந்தைகள் இயல்பாய்ச் செய்யும் பல விஷயங்கள் மிகவும் அழகுதான்.
//சி.கருணாகரசு said...
பதிலளிநீக்குஅருமை பாராட்டுக்கள்.//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கருணாகரசு அவர்களே!
//ஆயில்யன் said...
பதிலளிநீக்குஅருமையான - அனுபவிக்கயியலாத சோகத்தின் வெளிப்பாடு - கவிதை!
நினைத்து பார்க்கையில் நிறையவே இழக்கப்போகிறது இனி வரும் தலைமுறை :((//
இருக்கிற நிலைமையைப் பார்க்கையில் அப்படித்தான் தோன்றுகிறது ஆயில்யன் அவர்களே. வைகைக்கரையிலும் காவிரிக்கரையிலும் காசுக்குக் குடிநீர் வாங்கும் கொடுமை நடக்கிறதே...
//பிரியமுடன்...வசந்த் said...
பதிலளிநீக்குபோட்டோவும் குழந்தையும் அழகு
கவிதை நெம்ப யோசிக்கவைக்குது.....//
நன்றி வசந்த்...யோசிச்சே ஆகவேண்டிய நேரமிது.
//பிரியமுடன்...வசந்த் said...
பதிலளிநீக்குபோட்டோவும் குழந்தையும் அழகு
கவிதை நெம்ப யோசிக்கவைக்குது.....//
நன்றி வசந்த்...யோசிச்சே ஆகவேண்டிய நேரமிது.
திகழ் said...
பதிலளிநீக்குநீண்ட நாட்களுக்குப் பிறகு
அற்புதமான வரிகள்
படமா கவிதையா
பட்டிமன்றம் தான்
வாழ்த்துகள்
இன்னும் எழுதுங்கள்
நேரம் இருந்தால்
படிக்க ஆவலுடன்
திகழ்
நன்றிகள் திகழ்!
குழந்தை நம்ம உறவுக்காரக் குழந்தைதான்...படத்துக்காகவே எழுதப்பட்ட கவிதை இது.
விடுமுறைக்கு இந்தியா சென்றதால்தான் இந்த இடைவெளி. இனிமேல் அடிக்கடி எழுதிரலாம் :)
மிகவும் அற்புதமான கவிதை சகோதரி. படங்கள் வெகு சிறப்பு.
பதிலளிநீக்குமிக்க நன்றி ரங்கன் :)
பதிலளிநீக்கு