இடுகைகள்

முடிச்சவிழ்த்தான் முகுந்தனவன்!!!

படம்
துடித்த உதடுகள் அடக்கிய வார்த்தையை எடுத்து மறுபடியும் சொல்லுகின்றாள் சுசீலையவள்... அடுத்துவரும் வார்த்தை என்னவாய் இருக்குமென்று நடுக்கமாய்க் கணவனின் முகக்குறிப்பைப் பார்த்துநின்றாள்... எத்தனை வருஷமாச்சு, என்நிலையும் வறுமையாச்சு இத்தனைநாள் இல்லாமல் இல்லாமை தகித்தவுடன், அட்டமியில் அவதரித்த கிருஷ்ணனைப்போய் பார்ப்பதற்கும் வெட்கமா யிருக்குதடி, வேதனையும் தோன்றுதடி... என்று பதிலுரைத்தான் இயலாமை எடுத்துரைத்தான் வழி யொன்றுமறியாமல் வாய்மூடி நின்றவளைக் கண்டு மனம்வருந்திக் கண்விழிநீர் துளிர்த்தவனாய் நின்றான் குசேலன் நெடிதுயிர்த்தான் வார்த்தையின்றி... பண்டு குருகுலத்தில் பழகிய கண்ணனவன் இன்று துவாரகையின் மன்னனாய்த் திகழ்கின்றான் கொண்டுபோய் அவனிடத்தில் அன்போடு கொடுப்பதற்கும் ஒன்றுமில்லை என்னிடத்தில் என்றவனும் மருகிநிற்க, ஒன்றும் எதிருரைக்க இயலாமல் தளர்ந்தவளாய்ச் சென்று சிறிதவலைக் கொண்டுவந்த மாதரசி, நன்றாய் அவலதனைத் துண்டினில் முடித்துக்கட்டி, தந்தாள் கணவனிடம் செல்லுங்கள் என்றுரைத்தாள்... சென்றான் குசேலனவன் சோர்வுற்ற நடையுடனே கண்டான் கண்ணவன் தாவிவந்து ...

காலச் சுவடுகள்

படம்
அவள், வழிமறந்த கோவலனைப் பழிவாங்க முயலாமல் வழிமாற்றிப் பிள்ளைகளைப் பழியின்றி வளர்த்த அன்னை... கல்லும் மண்ணுமாய்க் கலந்து கட்டிய வீட்டை தன் சொல்லாலும் செயலாலும் சொர்க்கமாக்கிக் காட்டியவள்... அவள், கையளவு அரிசியுடன் உப்பிட்டுக் கஞ்சிகாய்ச்சி, கைபொறுக்கும் சூட்டில் ஊட்டிவிட்ட சுவையதனில் நெய்யிட்ட பால்சோறும் தோற்றுப்போய் ஓடிவிடும்... வாடா என்றருகிருத்தி வாஞ்சையாய்க் கரம்பிடித்து கூடாத நட்புடனே கூடாதே என்றுரைக்க, இன்று, கோடானு கோடி கொடுப்பவர் வந்தாலும் மீறாமல் நிற்கும்பிள்ளை மாயமோ அவளின் வார்த்தை? அன்று, இல்லாமை என்றவொன்று இருந்ததே தெரியாமல் வெள்ளாமைக் காட்டில் வேலைசெய்து உடல்மெலிந்தும் கல்லாமை இல்லாமல் பிள்ளைகளை வளர்த்துவிட்டு, அன்னையென்ற தெய்வமொன்று இல்லாத குறையன்றி இல்லாமை ஏதுமின்றி இமயமாய் நிற்கின்ற பிள்ளைகளின் புகழைமட்டும் காணாமல் போய்விட்டாள்... அன்னையின் நினைவுகளை அடிமனதில் சுமந்தபடி கண்ணீரின் சுவடுகளை கதவுக்குள் பூட்டிவிட்டு, நாடுவிட்டுப் போனபிள்ளை தேடிவந்தான் சுவடுகளை... கூடுகட்டி வாழ்ந்ததுபோல் குளிரிலும் மழையினிலும் அன்னையின் ...

என்னத்தைச் செய்தீங்க... (9)

என்னத்தைச் செய்தீங்க...(ஒன்பதாவது பகுதி) தொய்வுற்ற நடையுடன் தந்தை வெளியில்செல்ல ஐயுற்ற பிள்ளைகள் அமைதியை அணிந்தபடி, வெய்யிலில் வாடிய கொடியாய் முகம்கறுத்து பையவே போயங்கே வாசலில் அமர்ந்தனர்... உறையிட்ட வாகனம் ஒய்யாரமாய் நிற்க, உடைவாங்கப் பணமின்றி நிற்கும் மனத்தவிப்பில் முறையற்ற ஆசையால் மனவருத்தம் வந்ததென்று மருகினாள் சிவகாமி மௌனமாய் மனதுக்குள்... பக்கத்து வீட்டில் வெடித்த வெடியிலொன்று முற்றத்தில் வந்து சத்தமாய் வெடித்ததிர எட்டிப்போய்ப் பார்த்த பிள்ளைகள் இருவரும் பட்டாசும் பையுமாக அப்பாவைப் பார்த்தார்கள்... பைநிறைய வெடிவகைகள் பளபளக்கும் புது உடைகள் நெய்யிலே செய்த நெஞ்சினிக்கும் சுவையினங்கள் என்று யாவையும் எடுத்துவைத்த கணவனிடம் கையிலே மோதிரம் இல்லையே எங்கேயென்றாள்...

கல்லியல் ஆதி...

படம்
இந்திரனும் சந்திரனும் இணைந்தே சதிசெய்ய அந்தநாள் பூவுலகில் நிகழ்ந்ததோர் அவலமிது... சுந்தரமாய்த் தேயும் சுடர்மிகு நிலவினுக்கு வந்ததோர் களங்கமும் நிரந்தரமாய் நிலைத்ததன்று... சேவலாய் நள்ளிரவில் சந்திரன் குரலெழுப்ப ஆவலாய் நதியாடப் புறப்பட்ட கௌதமனும் ஆற்றங்கரை நோக்கி அகன்ற அவ்வேளை, அகலாத இரவுகண்டு ஐயம் மிகக்கொண்டான் கேட்ட குரலெண்ணிக் குழப்பம் மிகுந்திடவே மதியினில் கேள்வியைப் பதியமிட்டு வந்தவேளை, இந்திரனின் சதிவலையில் இறுகப் பிணைந்தபடி சுந்தரனாம் அன்னவனைச் சேர்ந்திருந்தாள் அகலிகையும்... வந்தவன் பிறனென்று புத்திக்குப் புரிந்தபின்னும் மந்திரம் போலவளும் மனமிசைந்து மயங்கிநின்றாள் கண்டான் கௌதமனும் கண்ணெதிரே களவதனைக் கொண்டான் பெருங்கோபம் எரிதழலாய் மாறிநின்றான் தன்னிலை மறந்தாள்தன் துணைவியென்ற றிந்தவனாய் இல்லுறை மனைவியைக் கல்லியல் ஆதியென்றான் விதியங்கு ஜெயித்தது வேதனை பெருகிடவே பதியினை நோக்கிக் கதறினாள் அகலிகையும்... இழிந்தனை நீயும் இதயத்தில் என்றுரைத்து, கழிந்திடும் உன் துயர் காத்திருப்பாய் என்றுசொல்லி, பழியுற்ற பெண்ணவளின் பாவத் துயர்துடைக்க வழியினில் ராமனும் வருவான் என்றுரைத்தார் ஆயிரம் ஆண்டுகள் ...

என்னத்தைச் செய்தீங்க... (8)

என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக்கதை- எட்டாவது பகுதி) மட்டைப் பந்தாடிய மதுரையின் சிறுவர்கள் ஒற்றைப்புற விளக்கை உடைத்துவிட்ட காரணத்தால் பொன்போல மதுரைக்குப் போன வாகனம் புண்பட்டுத் திரும்பியதைக் கண்டார் செல்வமணி... சேமித்த காசெல்லாம் செலவாகிப் போய்விடவே சாமிக்கு நேர்ந்துவைத்த உண்டியலைத் திறந்தெடுத்து வாகன விளக்கினைச் சரிசெய்து வந்தவரை வாய்மூடி மௌனமாய்ப் பார்த்திருந்தாள் சிவகாமி. திருவிழாக் காலமாய் தீபாவளி வந்தது... பள்ளிக்குச் சென்று திரும்பிய தந்தையிடம் பிள்ளைகள் உடைவாங்கப் போகலாம் என்றுரைக்க, முள்ளிலே மிதித்தவராய் முகம்கறுத்தார் செல்வமணி... செல்லமகள் சொன்னது செவியிலே கேட்கலையோ? நல்லநாள் வருமுன்னே நாலும் வாங்கவேண்டாமோ? என்றுதானும் மக்களுக்கு இசைவாகக் குரல்கொடுத்து இன்றுபோய் அனைவருக்கும் ஆடைவாங்கலாம் என்றாள்... இன்றுசெல்ல இயலாது இன்னொருநாள் வாங்கிடலாம் என்று முகம்திருப்பி மெதுவாகச் சொன்னபடி, சென்றுதான் கழற்றிய சட்டையை அணிந்தபடி பையைத் தடவிப்பார்த்தார் பெருமூச்சைப் படரவிட்டார்...

என்னத்தைச் செய்தீங்க...( 7)

பள்ளிசென்ற நாட்களிலே பயணம்செய்ய இயலாமல் முற்றத்தில் வாகனம் முழுவெயிலில் நிற்கக்கண்டு, மூவாயிரம் ரூபாய் முழுசாய்ச் செலவுவைத்து ஆடைவாங்கிச் சூட்டிவிட்டாள் அழகாகச் சிவகாமி... வார இறுதிநாட்கள் வந்தது மறுபடியும்... சக்கரத்தில் எலுமிச்சை குங்குமம் தடவிவைத்து பத்திரமாய்ப் புறப்பட்டு பழனிக்கு நேர்ந்துகொண்டு அக்காவின் வீட்டுக்கு அழையாமல் சென்றபோதும், ஆரத்தழுவிக் கொண்டு அன்போடு வரவேற்று காரக் கறிவறுவல் செய்துவைத்து விருந்தளித்து, மதுரைக்குச் சென்று மகள்வீட்டைப் பார்த்துவர மறுநாள் ஒருநாளும் வாகனம் கேட்டாள் அக்கா... அக்கா கேட்ட கணம் 'திக்'கென்று அதிர்ந்தாலும் அக்கா நீ கேட்டும் மறுப்பேனா என்றுசொல்லி, பக்குவமாய்த் தன்பெருமை காப்பாற்றும் வண்ணமாக மதுரைக்கு வந்துநானும் மகளைப்பார்க்க வேணுமென்றாள்... அக்காவும் தங்கையும் அருமை மக்களுடன் மதுரைக்கு மகிழ்வுடன் செல்லும் வழியிலே மறுநாள் வேலைக்காய் ஊர்செல்லும் கணவரை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டாள் சிவகாமி மத்தியான வெயில் மண்டையைப் பிளந்தாலும் மகிழ்வுந்தைப் பார்த்து இகழ்நகையைச் சிந்திவிட்டு, கரையோர இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தபடி பணிக்காகப் ப...

என்னத்தைச் செய்தீங்க...(6)

என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக் கதை-ஆறாவது பகுதி) ஆரத்தி யெடுத்து அழகாய்ப் பொட்டிட்டு காருக்குச் செய்த மரியாதை எதனையும் கணவன் எனக்குக்கூடச் செய்ததில்லை என்றபடி தனக்குள் புலம்பியே நெடிதுயிர்த்தார் செல்வமணி வாகனம் வாங்கினால் போதுமா என்ன, வாகான ஓட்டுனரைத் தேடுங்கள் என்றுசொல்ல நாளுக்கு நூறென்று நறுவிசாய்ப் பேசியே காருக்கு ஓட்டுனரைக் கொண்டுவந்தார் ஆசிரியர். வந்த ஓட்டுனரைக் கொஞ்சமும் விட்டிடாமல் செந்தூர்க் குமரனையும் சீர் குலசை அம்மனையையும் கன்னியா குமரியையும் கடற்கரை மாதாவையும் ரெண்டுநாள் விடுமுறையில் கண்டுவரத் திட்டமிட்டு, வண்டியில் புறப்பட்டு வழியில் இளைப்பாறிவிட்டு சென்று கிளம்புகையில் சக்கரம் பழுதாக, உண்டுவரக் கொண்டுசென்ற உணவுவகை அத்தனையும் வழியோர மரநிழலில் உண்ணும் நிலைவரவே, உள்ளுக்குள் எழுந்துவந்த உக்கிரம் புதைத்தபடி, ஊரோட கண்ணெல்லாம் மொத்தமாய் ஒன்றுபட்டு, காரோட சக்கரத்தைப் பாதித்த தென்றுசொல்லி பழுதினை நீக்கிப்பின்னர் வீட்டுக்கே திரும்பச்சொன்னாள்...