படம் : இணையத்திலிருந்து வெளிர்நீல வானத்தில் வெள்ளிறகு மேகங்கள், வெய்யில் பூக்களோடு விரிந்திருக்கும் தருநிழல், காற்றில் மிதந்துவந்து கன்னம்தொடும் மழைத்துளி, ஆற்றுநீர்ச் சுழிப்பில் அலைக்கழியும் சருகு, நீளமான மழைநாளில் நிமிஷநேரச் சூரியன், தூரிகையில் மாயம்செய்யும் துளியளவு தண்ணீர், மனம்நிறைந்த மகிழ்ச்சியில் முகிழ்த்துவரும் கண்ணீர், இருளணிந்த மலையினில் எங்கோ தெரியும் விளக்கு... கருநீல வானத்தில் கதிர்முளைக்கும் கிழக்கு, வழிநடந்த பாதத்தை வருடிவிடும் புல்மடி, மார்கழிப் பூக்களின் மடிதுயிலும் மென்பனி, கூடித்திளைத்த பின் கொஞ்சநேரத் தனிமை, காதலின் மொழியோடு கலந்துவரும் ஒருமை, இவையனைத்தும் ரசித்தபின்னும் எழுதுவதைக் கவிதையென்பது எந்த ஊர் நியாயம்? ***
Good starting for a good blog
பதிலளிநீக்குமிகவும் அருமையான பணிவான வணக்கங்கள். அருமை சகோதரி.
பதிலளிநீக்கு"தமிழுக்கு வணக்கம்!"
பதிலளிநீக்குநனி மிக அழகாய்ச் சொன்ன
கவிதாயினி உம்மைப்
பணிவோடு வணங்குகிறேன்
அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
நான் வழங்கும் மகாயோகம்
என் கவிதைகள்
---888 said...
பதிலளிநீக்குGood starting for a good blog
Thanks for your comment ---888.
வருகைக்கும் பதிவுக்கும் வணக்கங்கள் ராதாகிருஷ்ணன்.
பதிலளிநீக்குஉங்கள் வருகை என் பெருமை...
பதிலளிநீக்குநன்றி நாகராஜன் ஐயா.