எங்கு பார்த்தாலும் புலம்பல் இப்படியா பெய்வதென்ற குமுறல்... வெள்ளம் என்கிறீர்கள் வெறுப்பைக்கொட்டி எழுதுகிறீர்கள்... உள்ளும்புறமும் தண்ணீரென்று ஊரெல்லாம் அங்கலாய்க்கிறீர்கள்... ஆனால், என்ன குற்றம் செய்தேன் நான்? வா வா என்று வருந்தி அழைத்தீர்கள்... வாடுது பயிரென்று வயலில் நின்று விம்மினீர்கள்... கடவுளே, உனக்குக் கண்ணில்லையா? என்று கையை நீட்டிக் கதறினீர்கள்... கடனைக் கட்ட வழியில்லாமல் கடிதம் எழுதிவிட்டுக் கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டீர்கள்... கோயில் கண்ட இடமெல்லாம் யாகத்தீ வளர்த்தீர்கள், மழைக்காக ஜெபித்தீர்கள், தொழுகையில் அழுதீர்கள்... கழுதைக் கெல்லாம் கல்யாணம் பண்ணிவைத்து வெய்யில் வானத்தை வெறித்து நின்றீர்கள்... மரங்களுக்குப் பதிலாக மாடிவீடாய் அடுக்கிக்கட்டி இறங்கிவந்து அனைவருமாய் கூட்டுப் பிரார்த்தனை செய்தீர்கள்... ஏரிகளில் இடம்வாங்கி எடுப்பாய் வீடுகட்டி ஏசி போட்டு மாளவில்லை எப்போ வரும் மழையென்றீர்கள்... இத்தனையும் கேட்டுவிட்டு எத்தனை தவிக்கிறீர்களென்று, ஐயோ என இரங்கி ஆறுதலாய்ப் பொழிகையில், குளமாகுது ஊரென்று குமுறிக்குமுறி அழுகிறீர்கள்...
இப்படித்தான்...சிறு பிள்ளைகள் பெரிய கேள்விகளை கேட்பதை வழக்கமாக வத்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குநச்சென்று ஒரு கவிதை!
சுளீர்ன்னு உறைக்கிற மாதிரி கேள்வி.உண்மையல்லவா ?
பதிலளிநீக்கு:-)))))))
பதிலளிநீக்குசெம கவிதை....யதார்த்த வரி...கலக்குங்க!!
பதிலளிநீக்கு//velji said...
பதிலளிநீக்குஇப்படித்தான்...சிறு பிள்ளைகள் பெரிய கேள்விகளை கேட்பதை வழக்கமாக வத்திருக்கிறார்கள்.
நச்சென்று ஒரு கவிதை!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் வேல்ஜி!
//காமராஜ் said...
பதிலளிநீக்குசுளீர்ன்னு உறைக்கிற மாதிரி கேள்வி.உண்மையல்லவா ?//
வாங்க அண்ணா...நிஜம்தான் :)
நன்றி!
//ஹுஸைனம்மா said...
பதிலளிநீக்கு:-)))))))//
சிரிச்ச முகத்துக்கு நன்றி ஹுசைனம்மா :)
சமையலறையிலிருந்து வந்த பதில்தான் நெத்தியடி!!!
பதிலளிநீக்குஅதை அவர்களே சொல்ல மனசு வராதே!!!!!