தூரமாகிப்போன சாமியும் சந்தோஷமும்!

தூரமா யிருக்கிறப்ப 
தெருவுக்கெல்லாம் கூடாது, 
ஓரமா உக்காந்து 
பரமபதம் ஆடென்று 
காரமாய்ச் சொல்லிவிட்டுக் 
கண்ணை உருட்டியது பாட்டி... 

வேறெதுவும் பிடிக்காமல் 
வெற்றுத் தாளெடுத்துவைத்து, 
சுற்றிக் கோடுபோட்டு 
ஸ்ரீராம ஜெயம் எழுத, 
கெட்டுதுபோ குடியென்று 
பட்டென்று பிடுங்கிவிட்டு, 
சுத்தமாகிற வரைக்கும் 
சாமியெல்லாம் வேண்டாம், 
குத்தமாகிப் போகுமடி 
என்று பயமுறுத்த, 

தூரமாகிப்போனது 
சாமியுமா என்று 
பாரமாகிப்போன மனதுடன் 
பாயில்போய் விழுந்தது, 
பெரியவளாகிப் போன 
பத்துவயசுச் சின்னப் பூ.

*****

கருத்துகள்

  1. கவிதை கோபம் அழகு.இந்தியர்களுக்கு மட்டுமே பீடிக்கப்பட்ட இந்த மாதிரி மூடத்தனங்களுக்கு பாரம்பர்யம் கலாச்சரம் என்கிற பூச்சு வேறு.

    பதிலளிநீக்கு
  2. பத்துவயசிலேவா? அடப்பாவமே!!//

    13, 14ல்ல்லாம் ரொம்ப லேட்டு ஹுசைனம்மா.
    வலியையும் வேதனையும் உணர முடிந்த கவிதை. பூங்கொத்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. கொடுமை

    வேறென்ன சொல்வது ?

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்

    பதிலளிநீக்கு
  4. அந்த வயசு உணர்வை படம் பிடித்து காட்டினது போல இருந்ததுங்க சுந்தரா... மிக அருமையான வார்த்தை கோர்வை... எதார்த்தம் மிளிரும் எழுத்து

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!