நானும் பாலைவனம் போகிறேன்!
பலமாத இடைவெளியில்
பார்க்கக் கிடைக்கிற
படபடப்பான சந்தோஷம்...
நீர்க்கக் கிடைத்த மோரில்
கறிவேப்பிலை நறுமணமாய்,
ஊர்ப்புறத்து நட்புகளில்
ஊற்றெடுக்கும் அன்பு வெள்ளம்...
எதிர் பார்ப்புகள் எதுவுமின்றி
என்னுடைய முகம்பார்த்து,
இதயத்தைப் பகிர்ந்துகொள்ளும்
இணையில்லா மனநெருக்கம்...
வேர்க்கின்ற வேளையில்
கிடைக்கிற விசிறிபோல,
பார்க்கின்ற கண்களெல்லாம்
பகிர்ந்துகொள்ளும் பரவசம்...
யார்பிள்ளை நீயென்று
இயல்பாய்க் கேட்டுவிட்டு,
பேர்கேட்ட பின்னாலே
கைப்பிடிக்கும் கரிசனம்...
வேற்று நிலத்தில்
விழுதுவிட்ட வாழ்க்கையினைத்
தோற்கடித்துச் சரிக்கிற
உறவுகளின் உற்சாகம்...
இவையெல்லாம்,
எனக்கும் கிடைக்குமென்றால்
இப்போதே சொல்லுங்கள்,
நானும்
பாலைவனம் போகிறேன்!
//ஊர்ப்புறத்து நட்புகளில்
பதிலளிநீக்குஊற்றெடுக்கும் அன்பு வெள்ளம்...//
அந்த வெள்ளத்தில் தத்தளித்துத் திக்குமுக்காடிய வேளையில் பிறந்திருக்கும் கவிதை, மிக அருமை.
அருமை
பதிலளிநீக்குஆஹா!
பதிலளிநீக்கு//LK said...
பதிலளிநீக்குarumai//
வாங்க LK...நன்றி!
ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்கு//ஊர்ப்புறத்து நட்புகளில்
ஊற்றெடுக்கும் அன்பு வெள்ளம்...//
அந்த வெள்ளத்தில் தத்தளித்துத் திக்குமுக்காடிய வேளையில் பிறந்திருக்கும் கவிதை, மிக அருமை.
நிஜம்தான் அக்கா :)
நன்றி!
//திகழ் said...
பதிலளிநீக்குஅருமை//
வாங்க திகழ்...நலமா?
// velji said...
பதிலளிநீக்குஆஹா!//
வாங்க வேல்ஜி,
மிக்க நன்றி!
இவ்வளவு பாசத்தையும் விட்டு எப்படித்தான் அங்கே இருக்கிறீர்களோ என்று கலங்க வைக்கிறது உங்கள் கவிதை.
பதிலளிநீக்குசுந்தரா, மிக அருமை!
பதிலளிநீக்கு