உறவுக் கயிறு
படுமுடிச்சுப் போட்டுவிட்ட
பள்ளிக் காலணியின்
முடிச்சினை அவிழ்க்கச்சொல்லி
முன்னால்வந்து நீட்டுவாய்...
போடீ, முடியாதென்று
பொய்க்கோபம் காட்டினாலும்,
ஓர விழிகளில்
கண்ணீர் துளிர்க்கக்கண்டால்,
ஓடிவந்து அப்போதே
அவிழ்த்துவிடுவேன் நான்...
இன்றும்
முடிச்சினால் திணறுகிற
கடினமான வாழ்க்கைதான் உனக்கு...
கண்தோய்ந்த கண்ணீரும்
கையிலொரு பிள்ளையுமாய்
அவ்வப்போது நீ எந்தன்
கண்ணில் படுகிறாய்...
ஆனால்,
முடிச்சு இறுகுதென்று நீயோ,
இருக்கிறேன் அண்ணனென்று நானோ,
சொல்லிக்கொள்ள முடியாதபடி
என்னவோ தடுக்கிறது...
ஒற்றைப் புன்னகையும்
ஒருசில வார்த்தைகளுமாய்
விட்டுவிலகிப்போகிறோம்...
ஆனால்,
எட்டிச்சென்றபின்
முட்டுகிறது மனசு...
ஒன்றாய்ப் பிறந்த
நம் உறவின் அடர்த்தியை
எங்கே தொலைத்தோம்
இடைப்பட்ட நாட்களில்!???
பள்ளிக் காலணியின்
முடிச்சினை அவிழ்க்கச்சொல்லி
முன்னால்வந்து நீட்டுவாய்...
போடீ, முடியாதென்று
பொய்க்கோபம் காட்டினாலும்,
ஓர விழிகளில்
கண்ணீர் துளிர்க்கக்கண்டால்,
ஓடிவந்து அப்போதே
அவிழ்த்துவிடுவேன் நான்...
இன்றும்
முடிச்சினால் திணறுகிற
கடினமான வாழ்க்கைதான் உனக்கு...
கண்தோய்ந்த கண்ணீரும்
கையிலொரு பிள்ளையுமாய்
அவ்வப்போது நீ எந்தன்
கண்ணில் படுகிறாய்...
ஆனால்,
முடிச்சு இறுகுதென்று நீயோ,
இருக்கிறேன் அண்ணனென்று நானோ,
சொல்லிக்கொள்ள முடியாதபடி
என்னவோ தடுக்கிறது...
ஒற்றைப் புன்னகையும்
ஒருசில வார்த்தைகளுமாய்
விட்டுவிலகிப்போகிறோம்...
ஆனால்,
எட்டிச்சென்றபின்
முட்டுகிறது மனசு...
ஒன்றாய்ப் பிறந்த
நம் உறவின் அடர்த்தியை
எங்கே தொலைத்தோம்
இடைப்பட்ட நாட்களில்!???
உறவுக் கயிறையும் இறுகும் முடிச்சையும் முட்டும் மனசையும் இதைவிட யாரேலே அழகாய் சொல்லிவிட முடியும். அருமை சுந்தரா!
பதிலளிநீக்குநினைந்துருகவாவது பிறப்பின் சுவடுகள் இருக்கிறதே.
பதிலளிநீக்குஎன்றாவதொருநாள் பாக்கின்ற ப்போது குறுகுறுக்கும் மனதும்
தொண்டைகமறுகிற அன்பும் எப்படி இருக்கே என்கிற கேள்வியில் எல்லாம் சரியாகிபோகும்.
பாசக்கவிதை அழகு சுந்தரா.
enakkum manasu muttuthu sundara.
பதிலளிநீக்குsuper a ezuthiyirukinga.
anu
உங்கள் கவிதையின் கருத்தாழம் மிகவும் பிடித்திருக்கிறது.
பதிலளிநீக்குஅழகான, ஆழமான வரிகள்...
பதிலளிநீக்கு//ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்குஉறவுக் கயிறையும் இறுகும் முடிச்சையும் முட்டும் மனசையும் இதைவிட யாரேலே அழகாய் சொல்லிவிட முடியும். அருமை சுந்தரா!//
நன்றி அக்கா!
//காமராஜ் said...
பதிலளிநீக்குநினைந்துருகவாவது பிறப்பின் சுவடுகள் இருக்கிறதே.
என்றாவதொருநாள் பாக்கின்ற ப்போது குறுகுறுக்கும் மனதும்
தொண்டைகமறுகிற அன்பும் எப்படி இருக்கே என்கிற கேள்வியில் எல்லாம் சரியாகிபோகும்.
பாசக்கவிதை அழகு சுந்தரா.//
நன்றி அண்ணா!
அடடா! நிறைய உறவின் அடர்த்தி இப்படித்தான் குற்ற உணர்வோடு கரைந்து போகின்றன.அருமையான பதிவு பூங்கொத்து!
பதிலளிநீக்குஅருமையான கவிதை அக்கா..
பதிலளிநீக்குசிவஹரி
சுந்தரா, விட்டுப் போகாத ஆனால் இருகவும் முடியாத பாசக் கயிறுகளில் மாட்டிக் கொள்ளத்தான் பெண்களைப் படைக்கிறான் இறைவன். இங்கேயாவது அண்ணன் கொஞ்சம் நினைக்கிறான். சில அண்ணன்களுக்கு நினைக்கக் கூட நேரமில்லை.:(
பதிலளிநீக்குஅருமையான மனப் புலம்பல்.
//Anonymous said...
பதிலளிநீக்குenakkum manasu muttuthu sundara.
super a ezuthiyirukinga.
anu//
thanks anu.
//கலை said...
பதிலளிநீக்குஉங்கள் கவிதையின் கருத்தாழம் மிகவும் பிடித்திருக்கிறது.//
முதல் வருகைக்கு மிக்க நன்றி கலை!
//Sangkavi said...
பதிலளிநீக்குஅழகான, ஆழமான வரிகள்...//
மிக்க நன்றி சங்கவி!
//அன்புடன் அருணா said...
பதிலளிநீக்குஅடடா! நிறைய உறவின் அடர்த்தி இப்படித்தான் குற்ற உணர்வோடு கரைந்து போகின்றன.அருமையான பதிவு பூங்கொத்து!//
வாங்க அருணா :)
பூங்கொத்து ரொம்ப அழகு!
//Anonymous said...
பதிலளிநீக்குஅருமையான கவிதை அக்கா..
சிவஹரி//
நன்றி சிவஹரி தம்பி!
//வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்குசுந்தரா, விட்டுப் போகாத ஆனால் இருகவும் முடியாத பாசக் கயிறுகளில் மாட்டிக் கொள்ளத்தான் பெண்களைப் படைக்கிறான் இறைவன். இங்கேயாவது அண்ணன் கொஞ்சம் நினைக்கிறான். சில அண்ணன்களுக்கு நினைக்கக் கூட நேரமில்லை.:(
அருமையான மனப் புலம்பல்.//
நிஜம்தான் வல்லிம்மா.
மிக்க நன்றி!