வீட்டைவிட்டு வெளியேறிய
இரவுநேர மின்சாரம்,
வேதனையில் தேர்ந்தெடுத்த
உத்திரத்துக் கொச்சக்கயிறு...
முடிச்சுக்குள் முகம்நுழைக்கப்
பார்வையில் பட்டது,
வெளிச்ச நெருப்பில்
விழப்போகிற விட்டில்பூச்சி...
பளிச்சென்று இறங்கியவன்
விளக்கணைத்து யோசித்தான்,
பரஸ்பரம் உயிர்காத்த
பரிவுடன் பறந்தது விட்டில்.
4 மறுமொழிகள்:
நல்ல செறிவான சிந்தனை.
நறுக்கெனும் கவிதை. வாழ்த்துக்கள் சகோதரி.
அட்டகாசம் சகோ
வாழ்த்துக்கள்
விஜய்
//காமராஜ் said...
நல்ல செறிவான சிந்தனை.
நறுக்கெனும் கவிதை. வாழ்த்துக்கள் சகோதரி.//
நன்றிகள் அண்ணா.
// விஜய் said...
அட்டகாசம் சகோ
வாழ்த்துக்கள்
விஜய்//
வாங்க விஜய்...
மிக்க நன்றி!
Post a Comment
என்னுடைய வலைப்பக்கத்துக்கு வந்த உங்களுக்கு என் வரவேற்புகள்! வாசித்த இடுகைகளைப்பற்றி நீங்கள் சொல்லிச் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் கோடி பெறும்! :)