கடவுளே காப்பாற்று...


பாண்டியன் காலத்துப்
பழமையான கோயில்
பார்க்கச் சலிக்காத
பச்சிலை ஓவியங்கள்

பாலும் பழமுமாய்
பலப்பல அபிஷேகம்
ஆனால்,
பாழும் மனசுமட்டும்
ஏதோ ஞாபகத்தில்...

வேண்டுதல் எல்லாம்
நிறைவேறும் தலமென்று
அர்ச்சகர் சொன்னதும்
அவசரமாய் வேண்டினான்...

"வாங்கிய புதுச்செருப்பை
வாசலிலே விட்டுவந்தேன்
போகும்வரைக்கும் அதைப்
பத்திரமாய்க் காப்பாற்று" என்று...

கருத்துகள்

  1. அழகாய் சொல்லியிருக்கிறீகள்..'அவசரமாய் வேண்டினான்' வரை நன்றாயிருக்கிறது.ஆனால் செருப்பு மேட்டர் பழசு இல்லையா?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழுக்கு வணக்கம்!

நான்...இயற்கை பேசுகிறேன்!

நான் 'மூத்த' பிள்ளை!