அம்மா உனக்காக...

அழைக்கச் சலிக்காத
அன்பின் மறுபெயர்
உழைத்து எனை உயரவைத்து
ஊக்குவிக்கும் ஓருயிர்

விளக்கிவைத்த திருவிளக்காய்
ஒளிரச்செய்து என் வாழ்க்கை
தளர்ச்சியின்றிச் செல்ல
தவமிருந்த என்தாயே..

வயிற்றையும் மனசையும்
வாட விடாமல்
மழையெனக் குளிர்விக்கும்
நீ எனக்கு ஒரு
மகிழ்ச்சியின் மென்பொருள்

உறக்கம் வரும்வரைக்கும்
உன்மடியில் படுத்தபடி
விரல்கள் தலைவருடக்
கேட்ட கதையெல்லாம்

இன்று,
எனக்குநானே மனதுக்குள்சொல்லி
தைரியத்தை விதைக்கக்
கற்றுக்கொடுத்தவள் நீ

எட்ட இருந்தாலும்
மொத்தக் குடும்பத்தையும்
கட்டி யணைத்திடும்
உன் அன்பெனும் கயிற்றுக்கு
காட்டுப்படாதவர் யாருமேஇல்லை

கிட்ட இருக்கையில்
புரியாத உன் பெருமைகூட
இன்று
எட்ட இருக்கையில்
உணர்கிறேன் தாயே...

அன்று,
கல்லூரி விடுதியில்
காலம் கழித்தபோது
அர்த்தமே இல்லாமல்
உன்னோடு சண்டையிட்டு
எதுவுமே பேசாமல்
அழவைத்த நாட்களுண்டு...

இன்று,
செய்த தவறுக்குத் தண்டனையாக
ஏழாம் நாளில்
உன் குரலைக் கேட்பதற்காக
ஆறு நாளும் ஆசையைத்தேக்கி
ஆவலுடன் இங்கு
காத்துக் கிடக்கிறேன் அம்மா...

கருத்துகள்

  1. //
    கிட்ட இருக்கையில்
    புரியாத உன் பெருமைகூட
    இன்று
    எட்ட இருக்கையில்
    உணர்கிறேன் தாயே...//

    கவிதை உணர்வு பூர்வமா இருக்குங்க:)

    பதிலளிநீக்கு
  2. //உறக்கம் வரும்வரைக்கும்
    உன்மடியில் படுத்தபடி
    விரல்கள் தலைவருடக்
    கேட்ட கதையெல்லாம்

    இன்று,
    எனக்குநானே மனதுக்குள்சொல்லி
    தைரியத்தை விதைக்கக்
    கற்றுக்கொடுத்தவள் நீ//

    அருமையாய் கவிதையில கலக்கறிங்க,..:)

    பதிலளிநீக்கு
  3. //இன்று,
    செய்த தவறுக்குத் தண்டனையாக
    ஏழாம் நாளில்
    உன் குரலைக் கேட்பதற்காக
    ஆறு நாளும் ஆசையைத்தேக்கி
    ஆவலுடன் இங்கு
    காத்துக் கிடக்கிறேன் அம்மா...//

    இப்போலாம் வேற நாட்டுல இருந்தாலும் தினமும் பேச முடிகிறதே.:)

    அருமையா உணர்வுகளை சொல்லறிங்க, வாழ்த்துக்கள். தொடருங்க:)

    பதிலளிநீக்கு
  4. நன்றி ரசிகன்

    அம்மாவை நினைத்தாலே மனசு அன்பின் அரவணைப்புக்கு ஏங்குவது இயல்புதானே...

    தொடர்ச்சியான உங்கள் வரவேற்பிற்கு என் வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  5. /இன்று,
    செய்த தவறுக்குத் தண்டனையாக
    ஏழாம் நாளில்
    உன் குரலைக் கேட்பதற்காக
    ஆறு நாளும் ஆசையைத்தேக்கி
    ஆவலுடன் இங்கு
    காத்துக் கிடக்கிறேன் அம்மா.../

    பாசம் கூட
    பிரிவில் தான்
    தெரிகிறது

    பதிலளிநீக்கு
  6. நிஜம்தான் திகழ்மிளிர்...
    ஒருவகையில் பிரிவுதான் பாசத்தை இன்னமும் வலுப்படுத்துகிறது என்றே சொல்லலாம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் அடர்த்தியைச் சொல்லும் அருமையான கவிதை சகோதரி.

    பதிலளிநீக்கு
  8. அம்மாவைப் பற்றி எழுத ஆயுசு போதாதே...
    கருத்துக்கு ரன்றி ரங்கன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!