கடல்கடந்த கண்ணீர்...

கண்ணீருடன் என்னைக்
கரமசைத்து அனுப்பிவிட்டு
முந்தானைச் சேலையில்
வேதனைகள் துடைத்தவளே...
தலைமகனாய்ப் பிறந்த
காரணத்தால் என்னைநம்பி
தங்கையும் தம்பியரும்
வாழ்க்கைக்குக் காத்திருக்க
கண்கலங்க உனைப்பிரிந்து
கடல்கடந்து வந்துவிட்டேன்
என்னதவம் செய்தேனோ
என்னவளாய் உனைஅடைந்தேன்
மண்மகளை விஞ்சிய
பொறுமையின் பொக்கிஷமே
நான்
சொன்னதும் சம்மதித்து
சோதனைக்கு உடன்பட்டாய்...
துக்கம் விழுங்கிய
உன்
தொலைபேசிச் சத்தத்தில்
சித்தம்கலங்கி மன
யுத்ததில் தொலைந்துபோனேன்
சத்தியம் இது கிளியே
சங்கடங்கள் தீர்ந்தபின்னே
சன்னதியின் தெய்வமாக
கண்ணில்உனைத் தாங்கிடுவேன்
முத்தமிட்டால் கூட
முகம்சிவக்கும் மென்கொடியே
அத்தான் வரும்வரைக்கும்
அன்பைத்தேக்கிக் காத்திருப்பாய்...
Nice Post !
பதிலளிநீக்குUse a Tamil social bookmarking widget like PrachaarThis to let your
users easily bookmark your blog posts.
வாங்க ரோஷினி...
பதிலளிநீக்குஉங்கள் ஆலோசனைக்கு நன்றி.
விரைவில் செய்துவிடுகிறேன்...