கொத்தமல்லிச் சட்னியும் காலைநேரத்து விவாதமும்





காலை நேரத்தின்
வேலைப் பரபரப்பு...
ஆளுக்கொரு புறமாய்ப்
புறப்படும் அவசரத்தில்...

பாலைக் காய்ச்சிவிட்டு,
பச்சைநிறச் சட்னிவைத்து
தோசை ஊற்றிவந்து
மேசையில் அம்மாவைக்க,

பத்து நிமிஷத்தில்
பஸ்பிடிக்கும் அவசரத்தில்
கொத்துமல்லிச் சட்னியின்மேல்
காரசாரமாய் ஒரு விவாதம்...

நிறமெல்லாம் நல்லாயிருக்கு
மணமும்கூடப் பரவாயில்லை
சாப்பிட மட்டும்தான்
சங்கடமாயிருக்குதென்றான் தம்பி...

பச்சையெல்லாம் கால்நடைக்கு
பால்மட்டும் போதுமென்று
சுட்டதோசை தள்ளிவிட்டு
தப்பிச்சென்றாள் என் தங்கை...

ஏழுமணி ஆவதற்குள்
எதுக்கு இப்போ சாப்பாடு?
மதியம் உண்ணவருவேனென்று
நழுவிச்செல்லும் என் அப்பா...

அரைச்சுவச்ச சட்டினியோ
அப்படியே இருக்குதென்றும்
சுட்டுவைச்ச தோசையெல்லாம்
சூடாறிப் போச்சுதென்றும்
வருத்தமாய்ச் சொன்னபடி
என்னைப்பார்க்கிறாள் அம்மா...

அவளை,
நினைத்துச் சிரிக்கின்றேன்
கொத்துமல்லி மணக்கிறது...

கருத்துகள்

  1. பெயரில்லா12 மே, 2008 அன்று AM 9:57

    அன்னையர் தினத்து அருமையான பாடல். அம்மாக்களின் வேலையை take it for granted ஆத்தான் நம்ம எடுத்துக்கறோம்.

    பதிலளிநீக்கு
  2. இதுக்குக்கூட
    இவ்வளவு
    அழகான
    கவிதையா

    பதிலளிநீக்கு
  3. //சின்ன அம்மிணி said...
    அன்னையர் தினத்து அருமையான பாடல். அம்மாக்களின் வேலையை take it for granted ஆத்தான் நம்ம எடுத்துக்கறோம்.//

    நிஜம் தான் சின்ன அம்மிணி...ஆனால், நமக்கே அது நிகழும்போதுதான் வருத்தம் வருகிறது.
    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. //திகழ்மிளிர் said...
    இதுக்குக்கூட
    இவ்வளவு
    அழகான
    கவிதையா//

    உங்கள் ரசிப்புக்கு நன்றி திகழ்மிளிர்.
    உங்கள் வார்த்தைகளால் உற்சாகமடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. பிரமாதம் சகோதரி. எப்படியெல்லாம் வாழ்க்கையில் நல்விசயங்கள் ஓரங்கட்டப்படுகின்றன. அருமை.

    பதிலளிநீக்கு
  6. நன்றி ரங்கன்...

    நிஜம்தான் ரங்கன்...பொருட்களின் அருமை தெரியாமல் ஒதுக்கத்தான் செய்கிறோம் :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!