கிளம்பினாள் கிருஷ்ணவேணி...

அதிகாலை நேரத்துக்
கனவின் கதகதப்பு...

கல்லூரி மாணவியாய்
கவர்னரிடம் பட்டம் வாங்கி
கல்யாண மேடையில்
கணவனின் கைப்பிடித்து,
வெட்கத்தில் சிவந்த
விழிகள் நிலம்நோக்க
பக்கத்தில் கணவனின்
சுடும்மூச்சில் உடல் சிலிர்க்க...

ஐயோ...
பொழுது விடிஞ்சிடுச்சா
என்று உடல் பதறி,
உதறி மடித்துவைத்த
கிழிசல் போர்வைக்குள்
கனவின் சிதறல்களைக்
காப்பாற்றி வைத்துவிட்டு,

தூக்குச் சட்டியில்
பழங்கஞ்சி நிறைத்தபடி
தார்ச்சாலை போடக்
கிளம்பினாள் கிருஷ்ணவேணி...

கருத்துகள்

  1. உழைப்பாளர்கள் வாழ்க. கனவுகள் ஓரங்கட்டிவிட்டு வாழும் கிருஷ்ணவேணிகள் அதிகம்.

    பதிலளிநீக்கு
  2. நிஜம்தான் ரங்கன்...

    கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவளும் தாயானாள்!

தமிழுக்கு வணக்கம்!

நான்...இயற்கை பேசுகிறேன்!