தனிக்குடித்தனம்
இருக்கவும் முடியல
இருந்து உடல்வலித்தாலும்
படுக்கவும் முடியல...
ஏழுமாத வயிற்றை
இடையிடையே நீவிக்கொண்டு
முதுகுசாய்ந்து அமர்ந்தபடி
மூச்சுவாங்கிக்கொண்டிருந்தாள்...
உறக்கம் தொலைந்துபோக
கலக்கம்பிறந்தது மனதில்...
பற்றிக்கொண்ட பதட்டத்துடன்,
நெற்றிக்கு இட்டுவிட்டு,
மற்றென்ன செய்வதென்று
மனசுக்குத் தோன்றாமல்
கண்ணோடு கண்பார்த்து
கைப்பிடித்து நீவிவிட்டான்...
நீவிய கைகளின்
நடுக்கம் புரிந்தவளாய்
ஓரச்சிரிப்போடு அவன்
விரல்களை இறுகப்பற்ற,
அன்னையும் தந்தையுமாய்
அடுத்தவரைத் தேற்றத்தேற்ற
சின்னதாகிப்போனது
இரவும் இயலாமையும்!
//அன்னையும் தந்தையுமாய்
பதிலளிநீக்குஅடுத்தவரைத் தேற்றத்தேற்ற
சின்னதாகிப்போனது
இரவும் இயலாமையும்!//
இது தான் அன்புக்கு வலிமை சேர்க்கும் கணங்கள்.உறவை இன்னும் இறுக்கிக்கட்டும் கயிறு.
இன்னும் கொஞ்ச நாளில் குழந்தையும் சேர்ந்து கொள்ளும்....அனைத்தும் பழகிப் போகும்
பதிலளிநீக்கு'மெல்லினமே மெல்லினமே', "வருங்காலத்தில் இனி இப்படித்தான் இருக்கும்போல..." என்ற உங்களுடைய கமெண்ட்டை பப்ளிஷ் பண்ணும்போது ப்ளாகர் களவாடிக்கொண்டது.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும், நட்பு வலையில் இணைந்ததற்கும் நன்றிகள்!
ஏனோ படித்தவுடன் மனம் வலித்தது!
பதிலளிநீக்கு//ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
பதிலளிநீக்குஏனோ படித்தவுடன் மனம் வலித்தது!//
"இது தான் அன்புக்கு வலிமை சேர்க்கும் கணங்கள்.உறவை இன்னும் இறுக்கிக்கட்டும் கயிறு."- இப்படி நினைத்து வலியை விரட்டிடணும் :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமமூர்த்தி அவர்களே.
உங்க வலைப்பக்கத்தையும் பார்த்தேன்.
தலைவன் குழுமத்திற்கும் நன்றிகள்!
பதிலளிநீக்குதலைப்பே சேதி சொல்லுது.
பதிலளிநீக்கு//நீவிய கைகளின்
நடுக்கம் புரிந்தவளாய்//
ம்ம்..
வாங்க ஹுசைனம்மா...
பதிலளிநீக்குநன்றி!
கவிதை ரொம்ப நல்ல இருக்கு.
பதிலளிநீக்கு