ஏனடி இனியவளே?...

ஊமையான வார்த்தைகளின்
சோகமான அழுகுரல்
மோதித் தலையணைக்குள்
புதையும் குமுறல்கள்
உன்
தோட்டத்துப் பூக்கள்மட்டும்
என் வீட்டைப் பார்த்திருக்க
நீ மட்டும் ஏனடி
முகம்திருப்பிக் கொள்கிறாய்?

கனத்த விழியிமைகள்
நினைவுகள் கோர்த்தபடி
விரைத்து உறக்கத்தை
துரத்தி விட்டதடி
உரத்த பெருமூச்சின்
உஷ்ணம் பொறுக்காமல்
வீட்டுச் சுவர்கூட
வெம்மையைப் பொழியுதடி...

முற்றத்து நிலவொளியின்
முதிர்ந்த கிரணங்கள்
உன் முத்துச் சிரிப்பழகை
நினைவூட்டிச் சென்றிட
பத்துத் தலைகொண்ட
ராவணன் போலவே
சித்தம் மயங்கவைத்தாய்
ஏனடி இனியவளே?...

கருத்துகள்

  1. இடைவிடாமல் வந்து கவிதை படித்துப் பின்னூட்டம் தரும் உங்களுக்கு ஆயிரம் நன்றிகள் ரங்கன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!