கடல்நீரைக் குடிக்கின்றேன்...

ஐந்து வயசினில்
கடல்நீச்சல் பழகுகையில்
அஞ்சி அழுததினால்
கொஞ்சநீரைக் குடித்துவிட
அச்சச்சோ பிள்ளை
உப்புநீர் குடித்தானென்று

உச்சபட்சக் குரலில்
அலறி அவசரமாய்க்
கரைக்குக் கொண்டுவந்து
கவிழ்த்துத் தலைதாழ்த்தி
உப்புநீரெல்லாம் துப்பிடு
என்று சொல்லி
அப்பாவும் அம்மாவும்
பதறிய காலம்போய்

இன்று,
பாலைமணல் பூமியினில்
பகலிரவாய் வேலைசெய்து,
பாடுபட்ட என்குடும்பம்
மீண்டுவரும் முயற்சியிலே
பத்து வருஷங்களாய் நான்
கடல்நீர் குடிக்கின்றேன்
பாவமென்று யாரும் என்மேல்
பரிதாபம் கொள்ளவில்லை...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழுக்கு வணக்கம்!

நான்...இயற்கை பேசுகிறேன்!

அவளும் தாயானாள்!