நரகம் நிச்சயம்...

மெல்ல அருகில் வந்து
மெதுவாய் விரல்வளைத்து
கண்ணோடு கண்ணாய்
கனிவோடு எனைப்பார்த்து
கன்னத்தில் சுடும்
கனத்த மூச்சுடனே
சின்ன இடை தழுவிச்
சரியும் நிமிஷத்தில்....
ஆ...ஆ...
என்னைக் கடித்து
என் கனவைக் கலைத்திட்ட
சின்னக் கொசுவே,
உனக்கு
நரகம் நிச்சயம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவளும் தாயானாள்!

தமிழுக்கு வணக்கம்!

நான்...இயற்கை பேசுகிறேன்!