என்னருகில் நீ வேண்டும்...

எங்கே இருந்தாலும்
என்
பார்வைக்குள் நீ வேண்டும்

உன்
மூச்சுக்காற்றை நான்
உயிர்க்காற்றாய்ப் பருகவேண்டும்

கண்கள் எனைவருடக்
கரங்கள் கோர்த்தபடி
கானகத்தில் நடந்தாலும்
எனக்கது சொர்க்கம்தான்...

பற்றிய கரங்கள் ரெண்டும்
பல கதைகள் பேசிக்கொள்ள
ஒற்றைநொடி விட்டாலும்
உயிர்துடிக்கும் அறிவாயோ?...

காலைப் பரபரப்பில்
விறுவிறுப்பாய்ச் சுழலுகையில்
வேலை கெடுக்கும் உந்தன்
விழிகளின் உரசல்கள்
மாலைப் பொழுதுவரை
மனதில் நின்று
இம்சை செய்யும்...

இன்னமும் சொல்லிவிட்டால்
வார்த்தைகளும் வழிமறக்கும்
என்னருமை மன்னவனே
என்னருகில் நீ வேண்டும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!