காதலுடன் காத்திருப்பேன்...

என்
நினைவெனும் தொட்டிலிலே
நிதம் உறங்கும் தேவதையே,
இங்கே,
கனவுகளும் இல்லாமல்
உயிர்சுமத்தல் பெரும்வதையே...

உறவுகளெல்லாம் கூடி
உனையெனக்கு மணமுடித்தால்
சிறகடித்துப் பறப்பதற்குச்
செவ்வானில் வழியமைப்பேன்...

இரவுகளெல்லாம் தகிக்க
இரக்கமின்றிப் பிரித்துவிட்டால்
கரைபுரளும் கண்ணீரில்
காதல்மனம் துடித்துநிற்பேன்...

பிரிவுதனில் பரிதவித்துப்
பார்க்காத நிலைவரினும்
கனவுகளில் உனைச்சுமந்து
காதலுடன் காத்திருப்பேன்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவளும் தாயானாள்!

தமிழுக்கு வணக்கம்!

நான்...இயற்கை பேசுகிறேன்!