கனவுதிர்காலம்...

உதிரும் சிறகுகளாய்
வாழ்க்கையின் நம்பிக்கை
சிதறும் சருகுகளாய்க்
கலைந்திடும் கனவுகள்...

உனக்குமட்டும்
ஏன் புரியமறுக்கிறது
என் உதடுகள் உச்சரிக்கும்
உரத்த சப்தங்கள்கூட...

கனவுகளின் சுகத்தில்
நிஜங்களின் வலியை
நெருப்புக்கு இரையாக்கி
நிமிர்ந்து நிற்கிறேன்...

அன்று உன்
அலட்சிய வார்த்தைகளால்
பலியிடப்பட்டுவிட்ட
ரத்தம்தோய்ந்த மனதுடன்
எதிர்காலம் நோக்கி
எழுந்து நடக்கிறேன்...

இன்னமும்
எண்ணற்ற கேள்விகளால்
என்னைச்சிறையிட்டு
எங்கும் நகரவிடாமல்
நங்கூரமிடுகிறாயே...
நியாயமா இது?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழுக்கு வணக்கம்!

நான்...இயற்கை பேசுகிறேன்!

நான் 'மூத்த' பிள்ளை!