உருகி வழியுது காதல்...

ஓரத்துக் கரைப்படகு
உச்சிவெயில் சுடும்பொழுது
உலகையே மறந்தபடி
சிரித்திருக்கும் இரு இளசு

கடலோரம் தொட்டுத்
தொடுவானம் வரைக்குமாய்
பொங்கிப் பரவும் இது
காதலில் ஒரு தினுசு

அன்றாடக் கூலியான
அப்பாவை ஏமாற்றி
அகப்பட்ட காசு இங்கே
உருகுது ஐஸ்கிரீமாய்...

பத்துப்பத்திரம் தேய்த்துப்
பாடுபட்டுப் படிக்கவைக்கும்
அன்னையின் நம்பிக்கை
அனல்பட்ட பனிநீராய்...

விழிகளில் தேக்கிய
காதலின் மயக்கத்தால்
கல்லூரிப் பாடங்கள்
கனக்குது பெரும்சுமையாய்...

இன்று,
உணர்ச்சிகளின் பெருக்கத்தில்
கடமைகள் தொலைத்துவிட்டு
விளையாட்டாய் வரும் காதல்
வினையாகிவிடும் வாழ்வில்...

கருத்துகள்

  1. //அன்றாடக் கூலியான
    அப்பாவை ஏமாற்றி
    அகப்பட்ட காசு இங்கே
    உருகுது ஐஸ்கிரீமாய்...

    பத்துப்பத்திரம் தேய்த்துப்
    பாடுபட்டுப் படிக்கவைக்கும்
    அன்னையின் நம்பிக்கை
    அனல்பட்ட பனிநீராய்..//

    அடடா.. சூப்பர்.

    பதிலளிநீக்கு
  2. //விழிகளில் தேக்கிய
    காதலின் மயக்கத்தால்
    கல்லூரிப் பாடங்கள்
    கனக்குது பெரும்சுமையாய்...//

    இது உண்மைதான்:)

    பதிலளிநீக்கு
  3. //இன்று,
    உணர்ச்சிகளின் பெருக்கத்தில்
    கடமைகள் தொலைத்துவிட்டு
    விளையாட்டாய் வரும் காதல்
    வினையாகிவிடும் வாழ்வில்...//

    ஆஹா.. எப்டிங்க இதெல்லாம்.. காதல்ன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு,பசங்க பண்ணுற ரவுசெல்லாம் சொம்மா நச்ன்னு உறைக்கற மாதிரி எழுதியிருக்கிங்க..:)))

    கவிதை ,கலக்கலா வந்திருக்குங்க:)
    வாழ்த்துக்கள். தொடருங்க:)

    பதிலளிநீக்கு
  4. //இன்று,
    உணர்ச்சிகளின் பெருக்கத்தில்
    கடமைகள் தொலைத்துவிட்டு
    விளையாட்டாய் வரும் காதல்
    வினையாகிவிடும் வாழ்வில்...//

    ஆஹா.. எப்டிங்க இதெல்லாம்.. காதல்ன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு,பசங்க பண்ணுற ரவுசெல்லாம் சொம்மா நச்ன்னு உறைக்கற மாதிரி எழுதியிருக்கிங்க..:)))

    கவிதை ,கலக்கலா வந்திருக்குங்க:)
    வாழ்த்துக்கள். தொடருங்க:)//

    வாங்க ரசிகன்...
    வருகைக்கும்,ரசனைக்கும்,அழகான உங்கள் பின்னூட்டத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!