அந்நிய மண்ணில்...

அப்பளம் வடகமும்
அரைத்துவிட்ட சாம்பாரும்
கொப்பரைத் துவையலும்
கொழுந்து வெற்றிலையோடு
கற்பூரம் மணக்கக்
கதைசொல்லும் காற்றினையும்
சிற்பம்போல் சிரிக்கும்
எங்குலப் பெண்களையும்
நட்போடு நலம்பேசும்
நல்ல மனிதரையும்
அற்பப் பதவிக்காய்
உதறிவிட்டேனோ என்று
அத்தான் புலம்புவார்
அவர்வழியில் நானும்தான்...

கருத்துகள்

  1. நன்றாய் இருக்கின்றன உங்கள் கவிதைகள்! வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. உங்கள் முதல் வாழ்த்துக்கு, என் முதல் வணக்கம் இராம.வயிரவன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. அழகான் பொருள் பொதிந்த வரிகள்.வாழ்த்துகள் சுந்தரா.
    அமீரகம் வரும்போது உங்களைச் சந்திக்க முடியுமா என்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. கவிதையில் வார்த்தைகள் சரளமாய் வருகின்றன. வாழ்த்துக்கள்!.
    புலம்பெயர்ந்தோர் அநேகரின் ஏக்கமும் இதுவே.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதை. மிக்க நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  6. //வல்லிசிம்ஹன் said...
    அழகான் பொருள் பொதிந்த வரிகள்.வாழ்த்துகள் சுந்தரா.
    அமீரகம் வரும்போது உங்களைச் சந்திக்க முடியுமா என்று பார்க்கிறேன்.//

    தங்கள் வருகைக்கும்,கவிதை படித்துப் பின்னூட்டம் இட்டமைக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள். அமீரகத்திற்கு நீங்கள் வரும்நாளை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. //ஆ.கோகுலன் said...
    கவிதையில் வார்த்தைகள் சரளமாய் வருகின்றன. வாழ்த்துக்கள்!.
    புலம்பெயர்ந்தோர் அநேகரின் ஏக்கமும் இதுவே.//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கோகுலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. //Radhakrishnan said...
    அருமையான கவிதை. மிக்க நன்றி சகோதரி.//

    தொடர்ச்சியான தங்களின் ஊக்குவித்தலுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ரங்கன்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!